,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
வைகோ கடிதம்
இமைப்பொழுதும் நீங்காது
என் இதயத்துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும்
கலந்துவிட்ட
கண்ணின் மணிகளே,
என் இதயத்துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும்
கலந்துவிட்ட
கண்ணின் மணிகளே,
ஜனநாயக மாளிகையைத் தாங்கி நிற்கும் வலுவான தூண்களுள் ஒன்றுதான் பத்திரிகைத் துறை ஆகும். இந்தியாவில் நெருக்கடி நிலை எதேச்சதிகாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட போது அந்த நாள்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் தி.மு.க. இணைச் செயலாளராக இருந்த நான், மாவட்டங்கள்தோறும் மாணவர் பாசறைக் கூட்டங்களை நடத்தி, இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்தைச் சாய்க்க சர்வபரித் தியாகத்திற்கும் நம்மை ஆட்படுத்திக் கொண்டு அறப்போரில் ஈடுபட வேண்டும் என்று, மாணவர் படையைத் திரட்டுகின்ற வேலையில் முனைப்பாக ஈடுபட்டேன்.
இளம் ரத்தம் கொதிக்கும் என்பது போல், மாணவர்கள் ஆவேசமாகக் கூறிய புரட்சிகரமான கருத்துகளை எல்லாம் பதிவு செய்து, 1975 செப்டெம்பர் முதல் வாரத்தில், அப்பொழுது அரசினர் தோட்டத்தில் இருந்த தி.மு.க. அலுவலகத்தில் இருந்த முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞரையும், கல்வி அமைச்சரும் பொதுச் செயலாளருமான நாவலரையும் சந்தித்து, இளைய பட்டாளம் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள எப்படியெல்லாம் ஆயத்தமாக இருக்கிறது என்பதற்குச் சான்றுதான் இந்தக் குறிப்பு ஏடு என்று, நான் பதிவு செய்து இருந்த ஆவணத்தைக் கலைஞரிடம் கொடுத்தேன்.
முழுமையாகப் படித்துப் பார்த்த கலைஞர் அவர்கள் எதுவும் கூறாமல், அதனை நாவலரிடம் தந்தார். படித்துப் பார்த்த நாவலர், என் மீது மேலும் கீழும் பார்வையைச் செலுத்திவிட்டு, ‘இந்த ஒரு நோட்டுப் புத்தகம் போதும்; நம்ம ஆட்சியை இந்திரா காந்தி டிÞமிÞ செய்ய; இந்த நோட்டை உடனே தீ வைத்துக் கொளுத்த வேண்டும்; இப்பவே இங்க அலுவலகத்தில் கொடுத்து விடு’ என்று சொன்னார். அப்பொழுது மாணவர் அணியின் இன்னொரு இணைச் செயலாளரான செஞ்சி இராமச்சந்திரனும் உடன் இருந்தார்.
அதிர்ச்சியுற்ற என் முகபாவத்தைக் கவனித்த கலைஞர் அவர்கள், ‘அவரிடமே கொடுத்து விடுங்கள். அவரே அந்த வேலையைச் செய்து விடுவார்’ என்றார்.
உயிரோட்டம் நிறைந்த கருத்துகளை உள்ளடக்கிய அந்த ஆவணத்தை அழிக்க எனக்கு மனம் இல்லை. அதனால், திருநெல்வேலி கூட்டுறவு பயிற்சிப் பள்ளியின் தலைவராக நான் பொறுப்பு வகித்ததால், அப்பள்ளியின் அலுவலகத்தில் உள்ள எனது பீரோவில் வைத்துப் பூட்டிப் பத்திரப்படுத்தினேன்.
1976 ஜனவரி 31 ஆம் தேதி, தாமிரபரணி ஆற்றங்கரையில் வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில், நெல்லை மருத்துவக் கல்லூரி மாணவர் கழகத் தோழர்களுடன் மாலை ஆறு மணி அளவில் உரையாடிக் கொண்டு இருந்த போது, ஒரு மாணவர் ஓடி வந்து, தினமலர் அலுவலக வாசலில் ஒரு போÞடர் தொங்குகிறது. அதில் ‘கருணாநிதி அரசு டிÞமிÞ’ என்று கொட்டை எழுத்துகளில் போடப்பட்டு இருக்கிறது என்று பதற்றத் தோடும் பரபரப்போடும் கூறினார்.
நான் உடனே, சென்னையில் உள்ள அமைச்சர்கள் சிலரோடு தொடர்பு கொள்ள முயன்றேன். தொடர்பு கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் அலைபேசிகள் கிடையாது.
நீதித்துறையில் மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒரு பெருமகனாரின் இல்லத் திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தி.மு.க. ஆட்சி குடியரசுத் தலைவரால் கலைக்கப்பட்டு விட்டது என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. அன்று இரவு 10 மணி அளவில் காவல் துறை துணைக் கண்காணிப் பாளர் இராதாகிருஷ்ண ராஜா தலைமையில் காவல்துறையினர் என் இல்லத்திற்கு வந்து கைது செய்து, பாளையங் கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் கொண்டு போய் வைத்தார்கள். நெல்லை மாவட்டத்தில் முதலில் கைது ஆனவன் நான்தான். நள்ளிரவு 12 மணி அளவில், வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழியினரான தோழர் மாப்பிள்ளைச் சாமியை, நக்சலைட் என்று கைது செய்து கொண்டு வந்தார்கள். சிறிது நேரம் கழித்து தங்கப்பாண்டியன் என்ற தி.மு.க. தோழரைக் கொண்டு வந்து அடைத்தார்கள். விடியற்காலை மூன்று மணி அளவில் தி.மு.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அழகியநம்பியைக் கைது செய்து அழைத்து வந்தார்கள்.
பொழுது விடிந்தபின் எங்களைச் சந்திக்க வந்த தோழர்கள், ‘திருவனந்தபுரத்தில் இருந்து இராணுவ டிரக்குகள், இராணுவ லாரிகள், தொடர்ச்சியாக, திருநெல்வேலி வழியாக வடக்கே செல்லுகின்றன. அந்த லாரிகளில் சிப்பாய்கள் துப்பாகிகளைக் கைகளில் ஏந்தியவர்களாகச் செல்லு கிறார்கள். பொதுமக்கள் மிகுந்த பீதி அடைந்ததால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. காலை பதினோரு மணிக்கும்கூடக் கடைகள் வெறிச்சோடிக் கிடந்தன்’ என்றனர்.
பிற்பகல் நான்கு மணிக்கு, போலீÞ வேனில் எங்களை ஏற்றி, கொக்கிரகுளம் நீதிமன்றத்திற்குக் கொண்டு போனார்கள். வேன் புறப்பட்டவுடன் நான், ‘சர்வாதிகாரி இந்திரா காந்தி ஒழிக; அடக்குமுறை ஒழிக’ என்று அடிவயிற்றில் இருந்து ஆவேசக் குரல் எழுப்பிக் கொண்டே சென்றேன். என் இடி முழக்கக் குரல் கேட்டு, வீதிகளில் வீடுகளில் இருந்த மக்களும், கடைகளில் இருந்தோரும் என்ன சத்தம் என்று பரபரப்பாக ஓடி வந்து பார்த்தார்கள்.
நீதிமன்ற வாசலில் நின்றுகொண்டும் முழக்கங்களை எழுப்பினேன். நீதிபதி எங்களை ரிமாண்ட் செய்தவுடன், அங்கிருந்து பாளையங்கோட்டை மத்தியச் சிறைக்குக் கொண்டு போகும் வரையிலும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டே சென்றேன். சிறைவாசலில் இருந்த நெல்லை மாவட்டத் தோழர் களும், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத் தோழர்களும் என் கைகளைப் பற்றிக்கொண்டு ‘கவலையோடு இருந் தோம்; உங்கள் வீறுகொண்ட உணர்ச்சி முழக்கம் எங்களுக்கு ஊக்கம் தந்தது’ என்றனர்.
பத்து மாதங்கள் கழித்து, 1976 அக்டோபர் 10, பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாள் அன்று, பாளைச் சிறையில் இருந்து நான் சேலம் சிறைக்கு மாற்றப் பட்டேன். 1977 பிப்ரவரி 3 ஆம் தேதி, அண்ணா நினைவு நாள் அன்று, தமிழகத்தில் கடைசியாக விடுதலை செய்யப்பட்ட தி.மு.கழகத்தவனாக சிறையை விட்டு வெளியே வந்தேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நாள்களில் எப்போதெல்லாம், எங்கெல்லாம் பத்திரிகை சுதந்திரத்திற்கு ஊறு நேர்ந்ததோ, அந்த அநீதியை எதிர்த்துக் கடுமையான கண்டனக் கணைகளை சம்பந்தப்பட்ட அரசுகள் மீது நாடாளுமன்ற விவாதங்களில் தொடுத்தவன் நான்.
மதுரையில் தினமலர் அலுவலகம் குண்டர் களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன், அங்கே விரைந்து சென்றேன். நொறுங்கிக் கிடந்த பகுதிகளைப் பார்த்தேன். தாக்கப் பட்டோருக்கு ஆறுதல் கூறினேன். 19 மணி நேரத்திற்குள் ஒரே நாளில் மதுரை மாசி வீதியில், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான தோழர்களைத் திரட்டிக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினேன்.
என்னைக் கடுமையாக நிந்தித்த வார ஏடு, நாளேடு பத்திரிகை நிருபர்கள் தாக்கப் பட்ட நேரங்களில் எல்லாம், எனது குரலே முதல் கண்டனக் குரல் ஆகும்.
இடித்துரைத்தல், விமர்சனங்கள், அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மட்டும் அல்ல, அனைத்துத் துறை யினருக்கும் தேவையானதாகும். அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை,
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்
கெடுப்பார் இலானுங் கெடும்
கடிந்து அறிவுரை கூறும் அறவோரின் துணை இல்லாத மன்னன், கெடுக்கும் பகைவர் இல்லாமலே கெடுவான் என்று கூறிவிட்டு, குறை கூறுவோரின் சொற்கள் மிகக் கசப்பாக இருந்தாலும், செவிகள் தாங்க முடியாத அளவிற்குக் கடுமையாக இருந்தாலும், அதனைப் பொறுத்துக் கொள்கின்ற அரசனது குடை நிழலில் உலகம் செழிக்கும் என விளக்கினார்.
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கும் உலகு
கவிகைக்கீழ் தங்கும் உலகு
கடுமையான நிந்தனைகள், இழிமொழி கள், ஏசல்களை என் இதயம் பலமுறை தாங்கிப் பக்குவப்பட்டு இருக்கின்றது.
1995 ஆம் ஆண்டு திருச்சியில் ம.தி.மு.க. மாநில மாநாடு நடைபெற்றபோது, ஒரு வார ஏடு, ‘ஜவுளிக் கடைகளில் கொள்ளையடித்து ம.தி.மு.க.வினர் பணம் திரட்டினர்’ என ஆலகால விடத்தைக் கக்கியது. அதனையும் பொறுத்துக் கொண்டேன். பிறிதொரு முறை, ‘தேர்தல் கூட்டணிக்கு 40 கோடி பணம் பேரம்’ என்று அப்பட்டமான அவதூறை வீசியது. அப்போதும் பொறுத்துக் கொண்டேன். இன்னும் ஒரு படி மேலே போய், ‘வைகோ தற்கொலை’ என்று அட்டைப்படத்தில் எழுதியது. அதனையும் தாங்கிக் கொண்டேன்.
2005 ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்று இருந்தபோது, இல்லினாய் மாநிலத்தில் Þபிரிங்ஃபீல்டு நகரத்தில், அமெரிக்காவின் மத்திய அரசும், இல்லினாய் மாநில அரசும் இணைந்து மிகப்பெரும் பொருட்செலவில் அற்புதமாக அமைத்துள்ள ஆபிரகாம் லிங்கன் அருங்காட்சியகத்திற்குச் சென்று இருந்தேன். உடைந்து போயிருந்த மிக எளிமையான ஒரு மரக்குடிலில் லிங்கன் பிறந்தது முதல், நாடகக் கொட்டகையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டது வரையில், அம் மாபெரும் தலைவனின் வாழ்க்கைச் சம்பவங்கள், கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் விதத்தில் அங்கே சித்தரிக்கப்பட்டு இருந்தன. அத்துடன், ஆபிரகாம் லிங்கனைப் பற்றிய மிகக் கொடூரமான விமர்சனங்கள், சகிக்க முடியாத அர்ச்சனைகள், பொய்ப் பழிகள் பிரசுரமான பத்திரிகைச் செய்திகள், கார்ட்டூன்கள், அரங்கம் நிரம்ப கண்ணாடிப் பேழைகளில் பதிக்கப்பட்டு இருந்தன. அந்த அருங்காட்சியகம் என் உள்ளத்தை மிகவும் ஈர்த்தது; எனக்குப் பல பாடங்களைப் புகட்டியது.
பொது வாழ்வில் இருப்பவன் கண்டன விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதே எனக்குத் தந்த படிப்பினை.
என் அணுகுமுறையை விமர்சிக்கலாம். என் செயல்பாடுகளில் குறை காணலாம். என் நடவடிக்கைகளை நிந்திக்கலாம். அது ஏடுகளின் உரிமை. ஆனால், நடக்காத ஒரு சம்பவத்தை நான் செய்ததாக, அல்லது நான் சொல்லாத ஒரு கருத்தைக் கூறியதாகச் செய்தி வெளியிட்டு, ஏளனமாக ஏகடியம் செய்வது ஏற்க முடியாதது. என் மீது காரணம் இல்லாமல், மனதிற்குள் கடுமையான வெறுப்பையும், துவேசத்தையும் வளர்த்துக் கொண்டு, அவற்றின் வெளிப்பாடாக வக்கரித்துப் போன எண்ணத்தோடு எழுதுவதை மறுக்காமல் விட்டால், அந்த ஏளனக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கக் கூடும் என்ற எண்ணம் அந்த ஏடுகளின் வாசகர்கள் மனதில் ஏற்படும்.
தமிழர்களின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், தமிழ் மொழிக்கு ஏற்றம் தரவும், தமிழகத்திற்குத் தொண்டு ஆற்றவுமான உயரிய குறிக்கோளைக் கருத்தில் கொண்டு, நெல்லைச் சீமையில் பிறந்த உயர்திரு ராமசுப்பையர் அவர்கள் தினமலர் நாளிதழைத் தொடங்கினார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தைக் கேரளம் அபகரித்து விடாமல், தாய்த்தமிழகத் தோடு இணைப்பதற்கு மார்சல் நேசமணி போன்ற தலைவர்கள் போராடிய காலத்தில், அதற்கு வலுவாகத் தோள் கொடுத்தவர் பெரியவர் ராமசுப்பையர்.
‘நன்றி மறப்பது நன்றன்று’ என்ற குறள் வாசகத்தை நினைத்துப் பார்க்கும் எளியவன், வேலூர் மத்திய சிறைக்கு வந்து என்னைச் சந்தித்துக் கனிவோடு பேசி அன்பு பாராட்டிய தினமலர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களை எந்நாளும் என் மனதில் உயர்ந்த இடத்திலேயே வைத்து இருக்கிறேன். பழந்தமிழர்களின் வரலாறை, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே நாணயங்களை உலவ விட்ட மன்னர்களின் பெருமையை, கிரேக்க ரோமானிய நாடுகளோடு பண்டைத் தமிழர்க்கு இருந்த வணிகத் தொடர்புகளை எல்லாம் உறுதிப்படுத்தும் ஆவணங்களாக, தமிழகத்தில் எவரும் செய்யாத அரிய ஆராய்ச்சியைத் தினமலர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மேற் கொண்டு, தமிழ் இனத்தின் பெருமையை உலகு அறியச் செய்து இருக்கின்றார்.
11,000 ஆண்டுகளுக்கு முன்னால் கடலுக்கு அடியில் அமிழ்ந்து போன உலகின் மிகப் புராதனமான நகரம் காவிரிப் பூம்பட்டினம் என்பதை, லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட ஆவணக் குறிப்பையும் தெரிவித்து, அறுதியிட்டுச் சொன்னவர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்பதை வேலூர் சிறையில் இருந்தவாறே சங்கொலி மடலில் குறிப்பிட்டேன்.
2006 ஆம் ஆண்டின் இறுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிளவு என்ற நிலையை ஏற்படுத்தி கழகத்தை அழிக்கச் சிலர் திட்டம் வகுத்தபோது, ‘அந்த முயற்சிகள் காற்றில் பறக்கும் தூசுகள் போல் காணாமல் போயின’ என்பதை தினமலர் ஏடு அழுத்தமாகத் தெரிவித்தது.
2004 ஆம் ஆண்டு தாமிரபரணி நதிக் கரையில் இருந்து தலைநகர் சென்னை வரை, மது ஒழிப்பு, நதிகள் இணைப்பு என்ற குறிக்கோளோடு, 1200 கிலோ மீட்டர் தொலைவு சீருடை அணிந்த 3000 தொண்டர்களுடன் நடந்த என்னையும், தோழர்களையும் தலைநகர் சென்னைக்குள் வர விடாமல் தாம்பரம் கண்டோன்மெண்ட் பகுதியிலேயே செப்டெம்பர் 14 ஆம் தேதி இரவு தமிழகக் காவல்துறை தடுத்தபோது, நடுநிசியில் தடையை உடைத்துக் கொண்டு 17 கிலோ மீட்டர் தொலைவை இரண்டரை மணி நேரத்தில் நாங்கள் கடும் வேகத்தில் நடந்து, அண்ணா சதுக்கத்தை அடைந் ததை, 15 ஆம் தேதி காலை சென்னை தினமலர், ‘தடையை உடைத்து வைகோ அதிரடி’ என்று தலைப்பு இட்டு நாட்டுக்குத் தெரிவித்தது.
இதனையும் நான் மறக்கவில்லை.
ஆனால், கடந்த இரண்டு மூன்று ஆண்டு களாக, பொதுமக்கள் நலன் காக்கும் வகையில் நான் ஆற்றும் உரைகளோ, வெளியிடும் அறிவிப்புகளோ, பங்கேற்கும் அறப்போர்களோ, தினமலர் சென்னைப் பதிப்பில் இடம் பெறுவதே இல்லை. மதுவின் கொடுமையால் தமிழ்நாடு சீரழிகிறது; பள்ளிப் பிள்ளைகளும் மாணவர்களும் ஏன் மாணவிகளும்கூடக் கொடிய மதுப்பழக்கத்திற்கு ஆளாவதை எண்ணுகையில் நெஞ்சு வெடித்துவிடுவது போன்ற வேதனை படர்கிறது. சமுதாய நலனுக்காக, மதுவிலக்கு உணர்வை மக்களிடம் பரப்புவதற்காக, குறிப்பாக இளம் தலைமுறையான மாணவர் சமுதாயத்திடம் ஏற்படுத்துவதற்காக, கழகக் கொடிகளைக் கட்டாமல், கட்சி அடையாளங்களைக் காட்டாமல், கோவையிலும் திருச்சியிலும், தலைநகர் சென்னையிலும் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்ற மதுவிலக்கு மாரத்தான் ஓட்டப்பந்தய நிகழ்ச்சிகளை நடத்தியபோது, தினமலர் சென்னைப் பதிப்பு அவற்றை முழுமையாக இருட்டடிப்புச் செய்தது.
சமுதாய நலனில் கொண்ட ஒரு பத்திரிகை, இப்படி என் மீதும் கழகத்தின் மீதும் வெறுப்பைக் காட்டுவது எதனால் என்று எனக்குப் புரியவே இல்லை.
நான் அரசியலில் ஒழுக்கத்தையும் நாணயத்தையும் கடைபிடிக்கிறேன். எனது நேர்மையின் நம்பகத்தன்மை ஒன்றுதான் எனது ஐம்பது ஆண்டுக் காலப் பொதுவாழ்வில் சேர்த்துள்ள சொத்து ஆகும். ஆயிரக்கணக்கான கோடிகள் பணத்தை ஊழலில் கொட்டிக் குவிக்கும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் அறிக்கைகள் முழுப்பக்கச் செய்திகளாகப் பிரசுரிக்கப்படுகின்றன.
பொருளாதார பலம் இல்லாத எங்கள் இயக்கத்திற்கு, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக நிதி திரட்டியபோது, ‘நிதி மிகுந்தவர் பொற் குவை தாரீர்; நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்’ என்ற பாரதியின் கூற்றுப்படி நான் நிதி கேட்டு அறிக்கை வெளியிட்டேன். ‘வைகோ யாசகம்’ (பிச்சை எடுக்கிறான்) என்று, சென்னை தினமலர் செய்தி ஆக்கியபோதும், எனக்காகப் பிச்சை எடுக்கவில்லையே? கட்சிக்காகத்தானே செய்கிறேன் என்று ஆறுதல் அடைந்தேன்.
தமிழகத்தின் வற்றாத ஜீவநதிகளுள் ஒன்றானதும், தமிழ்நாட்டில் புறப்பட்டுத் தமிழகக் கடலிலேயே சங்கமமாகும் ஒரேயொரு நதியான தாமிரபரணி நதியில் திருவைகுண்டத்தில் 1870 ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் கட்டிய அணையில் வெகு காலமாகத் தூர் வாரப்படாததால் மண்ணும் மணலும் குவிந்து வேலிக்காத்தான் செடிகள் எங்கும் வளர்ந்து, அணையில் எட்டு அடிகள் தேங்கி நிற்க வேண்டிய தண்ணீர் இன்றைக்கு ஒரு அடி மட்டுமே தேங்குகிறது.
முப்போகம் விளைய வேண்டிய 25,560 ஏக்கர் நஞ்சை நிலங்கள், ஒருபோகம்தான் சாகுபடியாகிறது, குடிதண்ணீரும் பற்றாக் குறை ஆகிறது, ஆண்டுதோறும் இருபது டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது என்பதால், அணையில் தூர் வார வேண்டும் என்று, விவசாய சங்கங்களோடு இணைந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து அரசுக்குக் குரல் கொடுத்தும், அது செவிடன் காதில் ஊதிய சங்காகப் போனது.
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் மூலமாக தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்து, தீர்ப்பு ஆயத்தின் நீதிபதி, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோதிமணி அவர்கள் தொலை நோக்கோடு தந்த தீர்ப்பு ஆணையால், மத்திய அரசு ஜூன் 10 ஆம் தேதி தூர் வார அனுமதி கொடுத்தும்கூட, மாநிலம் ஆளும் ஜெயலலிதா அரசு தூர் வாரும் வேலையைச் செய்யவில்லை.
எனவே, பல்லாயிரக்கணக்கான விவசாயி களைத் திரட்டிக் கொண்டு நாங்களே தூர் வாரும் வேலையைச் செய்வோம்; எங்களை எவரும் தடுக்க முடியாது என்று நான் அறிவித்ததன் விளைவாக, ஜூன் 29 ஆம் தேதி பகலில் அவசர அவசரமாக ஜெயலலிதா அரசு தூர் வாரும் வேலைக்குப் பூஜை போட்டதாகச் சொல்லி, மறுநாள் ஜூன் 30 ஆம் தேதி தீர்ப்பு ஆயத்தில் அறிக்கை தந்தது.
தீர்ப்பு ஆயத்தின் நீதிபதி மாண்புறு ஜோதிமணி அவர்கள், என்னுடைய முயற்சியை அவர் அன்று தந்த தீர்ப்பு ஆணையிலேயே பாராட்டிக் குறிப்பிட்டு இருக்கின்றார்.
விவசாயிகள் நலனைக் காக்க எளியேனும் இயக்கமும் மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றியோ, நீதியரசர் தந்த ஆணை குறித்தோ, தினமலர் சென்னைப் பதிப்பு ஒரு வரி கூட எழுதவில்லை என்பதால், தினமலர் பத்திரிகையின் சென்னைப் பதிப்பின் பொதுநல நோக்கம் கேள்விக்குரியதாகும்.
இந்நிலையில், தினமலர் நாளேடு, 2015 ஜூலை 9 சென்னைப் பதிப்பில் எட்டாம் பக்கத்தில், பக்க வாத்தியம் என்ற தலைப்பின் கீழ், என்னைக் கருத்துப் படமாகச் சித்தரித்துப் பதிப்பித்துள்ள வாசகங்களை அப்படியே தருகிறேன்.
“சமீபத்தில் தனியார் இயற்கை வேளாண்மைப் பண்ணைத் துவக்க விழாவில் பங்கேற்ற, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ‘மனித சமுதாயம் அறிவியலால் வியத்தகு சாதனைகள் படைத்துள்ளது. அதே அறிவியலால் தன்னைத் தானே அழித்தும் வருகிறது. மீத்தேன் திட்டத்தை எதிர்த்தோம்; நியூட்ரினோ ஆய்வையும் எதிர்க்கிறோம். அப்துல் கலாம், ஜனாதிபதி பதவிக்கு வர உதவினோம். இன்று அவர், நியூட்ரினோ ஆய்வு தேவை என்கிறார். மக்களுக்கு எதிரான எதையும் எதிர்ப்போம் என்றார்.
நிருபர் ஒருவர், அப்துல் கலாம், ஜனாதிபதி பதவிக்கு வர ம.தி.மு.க. ஆதரவு ஒரு காரணமாம்... காமெடி பண்றதுக்கும் ஒரு அளவில்லையா? என்றார். அருகிலிருந்த நண்பர், விட்டா, ஒபாமா அமெரிக்க அதிபரானதுக்கே தான்தான் காரணமுன்னு சொல்வாரு... இப்படியெல்லாம் பேசுறதுக்கு, தனக்குத் தகுதி இருக்கா, இல்லியான்னுகூட யோசிக்கிறது இல்லை... எனக் கூறி, தலையிலடித்து நகர்ந்தார்.”
இவ்வாறு எழுதி இருக்கின்றது.
ஜூலை 5 ஆம் தேதியன்று, காஞ்சி மாவட்டம் செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஒரகடத்தில் அமிர்தம் வேளாண் பண்ணை தொடக்க விழா நடைபெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அன்புச் சகோதரர் சம்பந்தமூர்த்தி அவர்கள், தனது 40 ஏக்கர் நிலத்தை இயற்கை வேளாண் பண்ணையாக அமைத்து இருக்கிறார். ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தாமல், மாட்டுச் சாணம், பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்தி, நெல், நவதானியங்கள், காய்கறிகள் பயிரிடுகிறார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காட்டிய பாதையில் இதனை நிறுவி இருக்கிறார்.
அங்கே நடந்த விழாவில் பேசுகையில், நம்மாழ்வார் அவர்களையும், இயற்கை வேளாண்மையையும் சிலாகித்துப் பேசி, தற்போது மக்களை வாட்டி வதைக்கும் எண்ணற்ற நோய்களுக்கு, ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் காரணம் என்பதை விளக்கினேன்.
சமுதாயத்திற்குத் தேவையான என் கருத்துகளில் ஒரு வரியைக் கூட அச்சிட மனம் இல்லாத தினமலர் ஏடு, மீத்தேன் குறித்தும், நியூட்ரினோ குறித்தும் நான் குறிப்பிட்டதில் ஆத்திரமும் எரிச்சலும் அடைந்து, பெருந்தகை அப்துல் கலாம் அவர்களைப் பற்றி நான் சொல்லாத வார்த்தைகளைச் சொன்னதாக பொய்யுரையை அச்சில் ஏற்றி, குத்தல் மொழியில் கும்மாளம் போடுகிறது.
நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தால் அறிவியல் ஆய்வுகள் முன்னேற்றம் அடையும் என்று பக்கம் பக்கமாக வரிந்து கட்டி எழுதி இருக்கின்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களும், அவருக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கின்ற சகோதரர் பொன்ராஜ் அவர்களும் தொடர் கட்டுரைகளைத் தந்தார்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலை ஐ.நா.வின் யுனெÞகோ நிறுவனத்தால், உலகின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, அங்கு எந்த ஒரு மாற்றத்தையும், சிறிய சேதத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்றும் யுனெÞகோ நிறுவனம் அறிவித்து உள்ளது.
உலகின் மிகப் பழமையான கடினப் பாறைகள் இருப்பது ஆல்ப்Þ மலையும் அல்ல; இமய மலையும் அல்ல; மேற்குத் தொடர்ச்சி மலைதான். இங்கேதான் ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும் என்றால், கேரளத்தில் இருந்து குஜராத் வரை நீண்டு இருக்கின்ற மேற்குத் தொடர்ச்சி மலையில், நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தைக் கேரளத்திலோ, கர்நாடகத்திலோ, மராட்டியத்திலோ, நரேந்திர மோடியின் குஜராத்திலோ அமைப்பதற்கு ஏன் யோசனை கூடச் செய்யவில்லை?
எந்த நாசக் கிடங்கையும் கொண்டு வந்து தமிழர்கள் தலையில் கொட்டி விடலாம் என்கின்ற ஆதிக்க மனப்பான்மை அல்லாமல் வேறு என்ன?
சரி. நியூட்ரினோவுக்கு ஆதரவாகக் கட்டுரை வெளியிடுவது தினமலரின் உரிமை.
மேதகு அப்துல் கலாம் அவர்களுடைய கட்டுரை அப்பத்திரிகையில் வந்ததால் தான், அவரைப் பற்றி நான் சொல்லாத ஒன்றைக் கூறியதாக அச்சிட்டுள்ளது தினமலர்.
அன்று நான் பேசியது என்ன? ஒலிநாடாவில் இருக்கிறது. ஒளிப்பதிவும் இருக்கிறது. அதை அப்படியே தருகிறேன்.
‘நான் மிகவும் மதிக்கின்ற அப்துல் கலாம் அவர்கள் இரண்டாவது முறையும் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று துடித்தவன் நான். அவருடைய தமிழ் உணர்வுக்குத் தலை வணங்குகிறேன். அவருடைய கவித்துவக்திற்குத் தலை வணங்குகிறேன். ஆனால், வேதனைப் படுகிறேன். அணுமின் நிலைய அணு உலைகள் வேண்டும் என்று அவர் பக்கம் பக்கமாக எழுதியபோது, நாங்கள் நொந்து போனோம். அவர் விஞ்ஞானி. நான் விஞ்ஞானி அல்ல. சாதாரண மனிதன்.
அதைப் போல நியூட்ரினோ தேவை என்று தினமலர் பத்திரிகையில் மூன்று நாட்கள் தொடர் கட்டுரை, இந்து பத்திரிகையில் தொடர் கட்டுரை பக்கம் பக்கமாக வந்தது. இந்தப் பரிசோதனையை மேற்குத் தொடர்ச்சி மலையில் எங்கள் தமிழகத் திற்கு வந்து நீங்கள் ஏன் செய்கிறீர்கள்? கேரளாவில் இருந்த குஜராத் வரை மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறதே? நீங்கள் கேரளத்தில் அமைக்கலாமே? கர்நாடகத்தில் அமைக்கலாமே? மராட்டியத்தில் அமைக்கலாமே? குஜராத்தில் அமைக்கலாமே? எங்கள் தென் மாவட்டம்தான் உங்களுக்குக் கிடைத்ததா?
மேற்குத் தொடர்ச்சி மலை உலகப் புராதனச் சின்னம். நான் இரண்டரை மணி நேரம் நீதிமன்றத்தில் வாதாடி தடை ஆணை வாங்கியிருக்கிறேன். எங்கள் மக்கள் நாளை அழிந்துவிடக்கூடாது என்பதற்காக.
விஷப்பரிட்சை செய்வதற்கு நாங்கள் என்ன பலி ஆடுகளா?
நியூட்ரினோ கூடாது என்ற நமது மேதா பட்கர் அம்மையாரை அழைத்துக் கொண்டு போய் தேனி மாவட்டத்தில் உள்ள மக்களைச் சந்திக்க வைத்தேன்.
எது மக்களுக்குக் கேடு செய்கிறதோ, அதை நான் தடுப்பேன். நான் பிறந்த புண்ணிய பூமி இந்தத் தமிழ்நாடு.”
இப்படித்தான் உரை ஆற்றினேன்.
மேதகு அப்துல் கலாம் அவர்கள் இரண்டாவது முறையும் ஜனாதிபதியாக வேண்டும் என்று, துடித்தவன் நான். அவருடைய தமிழ் உணர்வுக்குத் தலை வணங்குகிறேன் என்றுதானே பேசி உள்ளேன்.
ஆனால் தினமலர் என்னைப் பழிக்கிறது, ‘அப்துல் கலாம் ஜனாதிபதி பதவிக்கு வர உதவினோம்’ என்று நான் பேசியதாக.
இன்னார் ஜனாதிபதியாக வந்தால் நல்லது என்று, சாதாரண மனிதர்கள் யாரும் ஆசைப்படலாம். பாமரனும் அப்படி விரும்பலாம். அதைப்போல, அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக மீண்டும் வர வேண்டும் எனத் துடித்தேன் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
‘வியவற்க எஞ்ஞான்றும் தன்னை’ என்ற தமிழ் மூதுரையை, என் உள்ளத்தில் ஆழப் பதித்துக் கொண்டவன் நான். நான்தான் இதைச் செய்தேன்; என்னைத் தவிர வேறு யார்? என்ற கர்வமோ, இறுமாப்போ எனக்கு இல்லை. 51 ஆண்டுக்கால எனது நெடிய பொதுவாழ்வில், மேடு பள்ளங்கள் நிறைய உண்டு. நான் செய்த பிழைகளும் உண்டு. ஆனால், நான் உரிமை கொண்டாட வேண்டிய பல்வேறு பிரச்சினைகளில், என்னுடைய கடுமையான முயற்சிகளால், நடவடிக்கைகளால் சாதித்த பல்வேறு பிரச்சினைகளில் அதற்காக உரிமை கொண்டாடி தம்பட்டம் அடித்துக் கொள்பவன் அல்ல நான்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் எனும் மூன்று தமிழர் தூக்குத் தண்டனையைத் தடுப்பதற்காக புகழ் மிக்க வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்களை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அழைத்துக் கொண்டு வந்து வாதாடச் செய்து, தடை ஆணை பெற்றது மட்டும் அல்லாமல், உச்சநீதிமன்றத்தில் பல அமர்வுகளுக்கு, தில்லிக்குச் சென்று, ஜெத்மலானி அவர்களைப் பங்கேற்க வைத்து, இறுதியில் உச்சநீதிமன்றத்தில் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வைத்தோம். அந்த வழக்கில் மும்பை வழக்கறிஞர்கள் தில்லிக்கு வந்து செல்ல விமானக் கட்டணம் செலுத்தியதோடு, ராம் ஜெத்மலானி அவர்கள் வழக்காடி யதற்குக் கட்டணம் வேண்டாம் என்று கூறியபோது, அது முறையல்ல என்பதால், ஓரளவு தொகையைக் கொடுப்பதற்கும், சென்னையில் பல அமைப்புகளை இணைத்துக்கொண்டு போராட்டங்கள் நடத்துவதற்கும் ஏறத்தாழ 65 இலட்சம் ரூபாய் கழகத்தின் நிதியைச் செலவழிக்கச் செய்தது;
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிரச்சினையில் குற்றமற்ற நான்கு தமிழர்களுக்குத் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து, குடியரசுத் தலைவர் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு, தூக்கு நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்ட நிலையில், அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த சகோதரிகள், கண்ணீரும் கம்பலையுமாக சகோதரர் கொளத்தூர் மணி அவர்களுடன் என்னை வந்து சென்னிமலையில் சந்தித்ததால், அது குறித்து வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அமர்விலேயே வாதாட வைத்து, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அந்த நான்கு தமிழர்களின் உயிரைக் காக்க ஒரேயொரு மனிதனாகப் பாடுபட்டு வெற்றி கண்டது;
மரண பூமியில் துடிக்கும் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சுதந்திரத் தமிழ் ஈழம்தான் என்றும்; அதற்காகத் தமிழ் ஈழத்திலும், உலகெங்கும் உள்ள புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களிடமும், ஐ.நா. மன்றம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், ஈழத்தமிழர் வரலாற்றிலேயே முதன்முதலாக இக்கருத்தை பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரÞஸல்Þ நகரில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற, ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டில் அழுத்தமாகக் குரல் கொடுத்து, அண்ணா தி.முக. பொதுச் செயலாளர், தி.மு.க. தலைமை உட்படப் பலரும் அந்தக் கருத்தை ஆதரிக்கும் நிலையை ஏற்படுத்தியது;
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியார் கைகளுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க மத்திய அரசு முடிவு எடுத்த தற்குப் பின்பு, தமிழ்நாட்டின் மற்றக் கட்சிகள் எல்லாம் இந்தப் பிரச்சினையில் இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்ததற்குப் பிறகு, அன்றைய தலைமை அமைச்சர் வாஜ்பாய் அவர் களைச் சந்தித்து நியாயத்தை எடுத்துச் சொல்லி, அதன் பலனாக அந்த முடிவை வாஜ்பாய் அவர்களே ரத்துச் செய்ய வைத்தது;
கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்ட பத்திற்கு மத்திய அரசின் அனுமதி இல்லை என்ற நிலையில், குமரி மாவட்டமும் தெற்குச் சீமையும் கொந் தளித்தபோது, பிரதமர் வாஜ்பாய் அவர் களிடம் பிரச்சினையின் கடுமையை எடுத்துக் கூறி, மணி மண்டபத்திற்கான மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுத் தந்தது;
தொழிலாளர்கள் தினமாகிய மே நாளுக்கு, 1990 இல் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு விடுமுறை அறிவிக்கச் செய்தது;
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், தியாகத் தலைவர் ரெட்டமலை சீனிவாசன், வீரபாண்டிய கட்டபொம்மன், பி.எÞ. குமாரசாமி ராஜா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிடச் செய்தது;
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் டாக்டர் பாபா சாகேப், அண்ணல் அம்பேத்கர் திருவுருவப் படத்தைத் திறக்க வேண்டும் என்று, நாடாளுமன்றத்தில் முதன் முதலில் 1985 இல் குரல் கொடுத்தது;
கூடங்குளத்தில் அணு உலை அமைக்க, சோவியத் ரஷ்யாவுடன், ராஜீவ் காந்தி அரசு ஒப்பந்தம் செய்து கொண்டபோது, 1985 நவம்பர் 21 இல் அதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் ஒற்றைக்குரலாக முழக்கம் இட்டது;
இந்திய அரசியல் சட்டத்தை இந்தியில் மொழிபெயர்க்கும் அரசியல் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஒரேயொரு எம்.பி.யாக ஓட்டளித்தது;
இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை, தேசிய நதிகளாக அறிவித்து, நதிகள் இணைக்கப்பட வேண்டும்; அதற்கு முதல் கட்டமாகத் தென்னக நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது;
அதனையே தனிநபர் மசோதாவாக ஆக்கி, இந்திய நாடாளுமன்ற மக்கள் அவையில், கடந்த 65 ஆண்டுகளில் முதன்முதலாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளச் செய்தது;
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் என்று முதல் முதலாக இந்தியாவின் பிரதமர் வாஜ்பாய் அவர்களை அறிவிக்கச் செய்தது;
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களின் மூலÞதான விக்கிரகங் களை 1984 இல், அமெரிக்காவில் நடை பெற்ற இந்தியத் திருவிழாவுக்கு மத்திய அரசு அனுப்ப முனைந்தபோது, அதனை எதிர்த்து நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து தடுத்து நிறுத்தியது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணை யத்தில் இந்தி பேசாத மாநிலங்கள் வஞ்சிக்கப்படும் கொடுமையை ஆதாரங் களோடு மக்கள் அவையில் தாக்கல் செய்து, இந்தி பேசாத மாநிலங்களின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களையும் குரல் கொடுக்கச் செய்து தடுக்க முயன்றது;
தமிழகத்தின் அன்றைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களை இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா தில்லி விமான நிலையத்தில் நிருபர்களிடம் குற்றம் சாட்டியதற்கு 86 இல் நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜீவ் காந்தி மீது கேள்விக்கணை தொடுத்துத் திணறடித்தது;
ராஜீவ் காந்தி வெளியிட்ட காங்கிரÞ நூற்றாண்டு விழா மலரில் பெருந்தலைவர் காமராசர் படத்தைப் போடாமல், பட்டாபி சீதாராமையா படத்தைப் போட்டு, கீழே காமராஜ் நாடார் என்று குறிப்பிட்ட அந்த மலரைத் தீயிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முழங்கியது;
ஆசியக் கண்டத்திலேயே வேறு எவரும் சாதிக்காத விதத்தில், சிம்பொனி இசை அமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு, உரிய பாராட்டைத் தெரிவிக்காத மத்திய அரசுக்குக் கண்டனம் செய்தது;
வங்கத்துச் சிங்கம் நேதாஜியின் மகள் அனிதா போÞ அவர்களை, 1986 குடியரசு தின அணிவகுப்பின்போது, நீதான் நேதாஜியின் பேத்தியா? என்று கேட்ட ராஜீவ் காந்திக்கு நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்தது;
இந்தியச் சிறைகளில் வாடும் ஆயுட் கைதிகள் 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படலாம் என்பதை மாற்றி, தொடர்ந்து அவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்ற குற்ற இயல் நடைமுறைச் சட்டம் 443 ஏ பிரிவு திருத்த மசோதாவை, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள உறுப்பினர்களில் ஒரேயொரு எம்.பி.யாக எதிர்த்துப் பேசியது;
தென் தமிழகத்தின் வாழ்வாதாரமான பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாக்கக் கால் கடுக்க நடந்தது; 578 ஊர்களில் அரசியல் பேசாமல் அணைக்கு வரப் போகும் ஆபத்தை எதிர்க்க அனைத்து மக்களைத் திரட்டியது; அணையை உடைக்கத் திட்டமிட்ட கேரளத்தைத் தடுக்க மூன்று முறை கேரளம் செல்லும் 13 சாலைகளை மறித்து மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது;
1978 இல், மத்திய அரசு இந்தித் திணிப்பில் தீவிரம் காட்டியபோது, இந்திக் கடிதங்களைக் கிழித்து பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு எதிரே வீசியது;
இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ அடியேன் சாதித்தவை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்!
இப்படி என் வாழ்க்கையில் நடைபெற்ற எத்தனையோ சம்பவங்களில் நான் சாதித்ததாக முழு விவரங்களையும் நான் கூறியது இல்லை. எனக்குத் தன் முனைப்பு (நுபடி) இருக்கிறது என்ற எண்ணம் பிறருக்கு வரக்கூடாது என்பதால்!
கேடுகளில்தான் நன்மை விளையும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ளுறநயவ யசந வாந ரளநள டிக யனஎநசளவைல என்று சேக்Þபியர் அழகாகச் சொன்னார். அதுபோல, தினமலர் செய்த கேலியும் கிண்டலும், என்னை உண்மையைச் சொல்ல வைக்கின்றன.
இப்போது, மேதகு அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவர் ஆனது குறித்துச் சொல்கிறேன்.
2002 ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேதகு கே.ஆர். நாராயணன் அவர்களுக்குப் பிறகு அடுத்து யாரைக் குடியரசுத் தலைவர் ஆக்குவது? என்ற கேள்வி பெரிதாக எழுந்தது. அப்பொழுது நான் எந்நாளும் மிகவும் மதிக்கின்ற நேசிக்கின்ற மாமனிதர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் தலைமை அமைச்சர். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. அதன் ஒருங்கிணைப்பாளர் எனது உயிர் நண்பர் ஜார்ஜ் பெர்னாண்டÞ.
நான் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து கொண்டு இருந்தேன். தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அலைபேசியில் திரு ஜார்ஜ் பெர்னாண்டÞ என்னை அழைத்து, ‘கூட்டத்துக்கு எப்போது வருகிறீர்கள்?’ என்று கேட்டார். ‘கூட்டம் பிற்பகலில்தானே? எப்படியும் வந்து விடுவேன்’ என்றேன். ‘ஒருநாள் முன்னதாகவே வாருங்கள். நேரில் பேச வேண்டும்’ என்றார்.
அதன்படி டெல்லி சென்றேன். கிருஷ்ண மேனன் தெரு மூன்றாம் எண் வீட்டில் வசித்த ஜார்ஜ் பெர்னாண்டÞ அவர்களை அங்கு சந்தித்தேன். ‘அடுத்த குடியரசுத் தலைவராக மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வர வேண்டும் என்று நமது பிரதமர் விரும்புகிறார். அவர் மனதில் மராட்டிய ஆளுநர் அலெக் சாண்டர் இருக்கிறார். எனவே, நாளைய கூட்டத்தில் இந்தக் கருத்தை நீங்கள் முன்வைக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவிக்கச் சொன்னார்’ என்றார்.
அப்போதைய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘ஜார்ஜ் உங்களிடம் ஒரு விஷயத்தைச் சொன்னாரா?’ என்று கேட்டார். ‘ஆமாம் சொன்னார். நாளைய கூட்டத்தில் நானும் அதை வலியுறுத்துகிறேன்’ என்றேன்.
மறுநாள் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் வாஜ்பாய், எல்.கே.அத்வானி, டாக்டர் ஃபரூக் அப்துல்லா, நிதீஷ்குமார், பிரகாஷ்சிங் பாதல் உள்ளிட்ட தலைவர் களும், தி.மு.க. பிரதிநிதி விடுதலை விரும்பி, மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
‘குடியரசுத் தலைவர் பதவிக்கு யாரைத் தேர்ந்து எடுக்கலாம்? என்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இது. உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்’ என்று ஜார்ஜ் பெர்னாண்டÞ கூறினார். சில நிமிடங்கள் ஒருவரும் பேசவில்லை. நான் பேசத் தொடங்கினேன். ‘நமது ஜனநாயகத்தில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பு முக்கியமானது. மதச்சார் பின்மையை வலுப்படுத்துவது. இந்து மதம், சீக்கிய மதம், இÞலாம் உள்ளிட்ட சமயங்களைச் சார்ந்தவர்கள் குடியரசுத் தலைவர்கள் ஆகி விட்டார்கள். கிறித்துவ மார்க்கத்தைச் சேர்ந்தவர் எவரும் அந்த நாற்காலியில் உட்காரவில்லை. எனவே, இம்முறை ஒரு கிறித்துவர் அந்தப் பதவிக்கு வருவது ஏற்புடையதாகும். மராட்டிய மாநில ஆளுநராக இருக்கின்ற அலெக்சாண்டர் பெயரையும் நீங்கள் பரிசீலிக்கலாம்’ என்றேன். முக்கியமான தலைவர்கள் எந்தக் கருத்தையும் சொல்ல வில்லை.
நண்பர் விடுதலைவிரும்பி அவர்கள் மட்டும், ‘குறிப்பிட்ட பெயரைச் சொல்லி இங்கே பரிந்துரை செய்யக்கூடாது’ என்றார். ‘என்னுடைய கருத்தை நான் சொல்லுகிறேன்’ என்றேன். கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பிரதமர் நன்கு ஆலோசித்து முடிவு செய்யட்டும் என்று விவாதம் முற்றுப் பெற்றது. அனைவரும் அரங்கத்தை விட்டு வெளியேறினர். அதன்பின் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் அறைக்கு நான் சென்றேன்.
‘திரு அலெக்சாண்டர் அவர்களைப் பெரும்பாலோர் ஏற்காவிடில், இÞலாமிய சமூகத்தைச் சேர்ந்தவரை நீங்கள் பரிசீலிக்கலாமே?’ என்றேன். ‘யாரைச் சொல்லுகிறீர்கள்?’ என்றார். ‘அறிவியல் மேதை அப்துல் கலாமைச் சொல்லுகிறேன்’ என்றேன்.
என்ன காரணத்தாலோ வாஜ்பாய் அவர்கள், வேண்டாம் என்று தலையை அசைத்தார். ‘அவர் சிறந்த மனிதர். அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டவர். கூடுதலாக அவர் எங்கள் தமிழ்நாட்டுக்காரர். நன்றாக யோசி யுங்கள்’ என்று கூறிவிட்டு வந்தேன்.
இரண்டு நாள்கள் கழித்து, அதே அப்துல் கலாம் அவர்கள் பெயரையே ஜனாதிபதி வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தது.
தலைவர் வாஜ்பாய் அவர்களும், நண்பர் ஜார்ஜ் பெர்னாண்டÞ அவர்களும் இப்போது பேசும் சக்தியற்று படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய ஆற்ற லாளர் நண்பர் பிரமோத் மகாஜன், உடன்பிறந்த தம்பியால் சுட்டுக் கொல்லப் பட்டார். இவர்கள் எல்லாம், வைகோ சொல்லுவது உண்மைதான் என்று கூற முடியாது அல்லவா? அதனால், சும்மா அடித்து விளாசுகிறார் என்ற குத்தல் மொழி கூட எழலாம்.
‘தன்நெஞ்சறிவது பொய்யற்க’ என்ற கருத்தை மதித்து வாழும் நான் கூறுவது அனைத்தும் உண்மை.
திரு அப்துல் கலாம் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தபோது உடன் இருந்தவர் களுள் நானும் ஒருவன்.
நான் மேலே குறிப்பிட்ட சம்பவம் குறித்து இதுவரை நான் பேசியதும் இல்லை; எழுதியதும் இல்லை. இப்போது என்னை எழுத வைத்த தினமலருக்கு நன்றி.
சரி பிரச்சினைக்கு வருவோம். இரண்டாவது முறை அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக வேண்டும் என்று நான் மனதார விரும்பினேன். அவரிடம் நிருபர்கள் இதுபற்றிக் கேட்ட போது, ‘தனக்கு விருப்பம் இல்லை’ என்று கூறிவிட்டார்.
அந்தக் கட்டத்தில், காங்கிரÞ பாரதிய ஜனதா அல்லாத கட்சிகளின் கூட்டணி அமைப்பது குறித்து அரசியல் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் ஹைதராபாத் நகரில் சந்திரபாயு நாயுடு அவர்களுடைய இல்லத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முலாயம்சிங் யாதவ், அமர்சிங், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். நானும் அதில் கலந்து கொண்டேன்.
அடுத்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரின் போயÞ தோட்ட இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதல் நாள் தமிழகத்தில் உள்ள பிரபலமான ஆங்கில ஏட்டின் நிருபராக இருக்கின்ற எனது நேசத்திற்குரிய நல்ல நண்பர் அலைபேசியில் என்னிடம் பேசினார். ‘நாளை ஜெயலலிதா அவர்கள் இல்லத்தில் நடைபெறும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், வரப்போகும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் அப்துல் கலாம் அவர்களே அப்பதவிக்குத் தேர்ந்து எடுக்கப்பட ஏற்பாடு செய்ய வேண்டும். நீங்கள் இதற்காகப் பேசினால் காரியம் சித்தியாகும்’ என்றார்.
‘கலாம் அவர்களே எனக்கு விருப்பம் இல்லை என்று கூறி இருக்கிறாரே?’ என்றேன். ‘அரசியல் கட்சிகள் வற்புறுத் தினால், அவர் சம்மதம் அளிப்பார்’ என்றார். இந்தக் கருத்தை என் மூலம் பதிவு செய்வதற்கு அந்த நண்பரிடம் கூறியவர் அப்துல் கலாம் அவர்களுக்கும் மிகமிக வேண்டியவர்தான். அவர் பெயரைக் குறிப்பிட்டு தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை. இதற்கு மறுப்பு வந்தால் பெயரை வெளியிடுவேன்.
கூட்டம் காலை பத்து மணிக்கு போயÞ தோட்டத்தில். ஒன்பதரை மணிக்கெல்லாம் நான் சென்று விட்டேன். முலாயம் சிங் யாதவ், அப்போது அவருக்கு வலதுகரமாக இருந்த அமர்சிங், சந்திரபாயு நாயுடு ஆகியோரும் முன்பே வந்து விட்டார்கள். அவர்கள் மூவரோடு நான் மட்டும் தனியாக அறையில் அமர்ந்து பேசினோம். நான் அமர்சிங் அவர்களிடம், ‘இÞலாமிய சமூகத்தைச் சேர்ந்த அப்துல் கலாமை ஜனாதிபதி வேட்பாளர் ஆக்க வேண்டும் என்று நீங்களும், முலாயம் சிங் யாதவ் அவர்களும் மேடத்திடம் சொல்லுங்கள்’ என்றேன்.
முலாயம் சிங் யாதவ் கொஞ்சம் யோசித்தார். ‘சிறுபான்மை மக்கள் உங்களுக்கு எவ்வளவு பக்கபலமாக இருக்கின்றார்கள். இது உங்களுக்குப் பலம்தானே?’ என்றேன். ஆமாம் என்று தலையசைத்தார். சந்திரபாபு நாயுடுவுக்கும் இதில் மிக விருப்பம். ஆந்திர மாநிலத்தில் சிறுபான்மை மக்களின் நல்லெண்ணம் அவருக்குத் தேவையானது.
எடுத்த எடுப்பில் நான் இந்தக் கருத்தை முன்வைத்தால், இவர் என்ன சொல்லுவது? நாம் என்ன கேட்பது? என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் நினைக்கக்கூடும் என்று எண்ணித்தான், காய்களைக் கவனமாக நகர்த்தினேன்.
கூட்டம் தொடங்கியது. செல்வி ஜெயலலிதா அவர்கள் பேசினார். ‘நம்முடைய கூட்டணிக்கு என்ன பெயர் வைப்பது என்று முடிவு செய்து விட்டேன். ருnவைநன சூயவiடியேட ஞசடிபசநளளiஎந ஹடடயைnஉந. ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி. எண் சோதிட அடிப்படையில் (நியூமராலஜி) இந்தப் பெயரைத் தேர்வு செய்து இருக்கிறேன்’ என்றார்.
இது ருஞஹ என்று சொல்வது போல இருக்கிறதே என்றார் அமர்சிங்.
‘இல்லை. யுபிஏ க்கு கூட்டுத் தொகை இரண்டு. யுஎன்பிஏ என்றாலும் அதே எண்தான் கூட்டுத்தொகை வருகிறது’ என்றார் ஜெயலலிதா.
பெயரை முடிவு செய்து விட்டு அறிவிக்கும் போது அதற்கு ஏன் மறுப்புச் சொல்ல வேண்டும் என்று அமைதி காத்தோம். ‘குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரு அப்துல் கலாம் அவர்களையே இரண்டாம் முறையும் வேட்பாளர் ஆக்கினால் நல்லது’ என்றார் அமர்சிங். அதனை ஜெயலலிதா ஏற்கவில்லை.
‘இÞலாமிய சமூகத்தைச் சேர்ந்த அறிவாளியான அப்துல் கலாம் எனும் தமிழரை இரண்டாவது முறையும் குடியரசுத் தலைவர் ஆக்குவதற்கு நாம் முயற்சிப்பது தமிழக அரசியலிலும், நமக்கு நல்லதுதானே?’ என்றேன். முலாயம் சிங் யாதவ் அவர்களும், சந்திரபாபு நாயுடு அவர்களும் இந்தக் கருத்தை ஆதரித் தார்கள். பின்னர் ஜெயலலிதாவும் அதை ஏற்றுக் கொண்டார்.
யுஎன்பிஏ கூட்டணி சார்பில் அப்துல் கலாமைச் சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அந்த அறையில் இருந்தவாறே திரு சந்திரபாபு நாயுடு அவர்கள் அப்துல் கலாம் அவர்களுடன் தொலைபேசியில் பேசினார். ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களைக் குறிப்பிட்டு, ‘நாங்கள் எல்லோரும் நாளை மறுநாள் உங்களைச் சந்திக்க விரும்புகிறோம்’ என்றார். திரு அப்துல் கலாம் அவர்கள், ‘காலை பதினோரு மணிக்கு வாருங்கள்’ என்று நேரமும் ஒதுக்கி விட்டார்.
கூட்டம் முடிந்து அனைவரும் சென்ற பிறகு, ஜெயலலிதா அவர்கள் என்னிடம் ‘நீங்களும் வருகிறீர்களா? என்று கேட்டார். நீங்கள் விரும்பினால் நான் வருகிறேன்’ என்றேன். ‘வாருங்கள்’ என்றார். நானும் அந்தக் குழுவில் இடம் பெறுகிறேன் என்று சந்திரபாபு நாயுடு அவர்களிடம் ஜெயலலிதா தெரிவித்தார். மறுநாள் இரவு விமானத்தில் நான் டெல்லி போய்ச் சேர்ந்தேன். விமான நிலையத்தில் இறங்கியவுடன், போயÞ தோட்டத்தில் இருந்து பூங்குன்றன் என்னிடம் பேசினார்.
‘அம்மா அவர்களுக்குச் சற்று உடல்நலக் குறைவு. அதனால் நாளை தில்லிக்கு வரவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலைச்சாமியும், மைத்ரேயனும் கலந்து கொள்வார்கள்’ என்றார். நான் அந்த இரவிலேயே திரு அப்துல் கலாம் அவர்களுக்கு உதவியாளர்களுள் ஒருவரான திரு பொன்ராஜ் அவர்களைச் சந்தித்தேன். கிரீÞ நாட்டில் கிரேக்க நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆற்றிய அற்புதமான ஆங்கில உரையின் பிரதியைக் கேட்டேன். உடனே வலைதளத்தில் வரவழைத்துக் கொடுத்தார்.
அதை மேற்கோள் காட்டி, திரு கலாம் அவர்களே குடியரசுத் தலைவராக இரண்டாவது முறையும் பதவிக்கு வர வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்ற ஒரு கடிதத்தை ஆங்கிலத்தில் அன்று இரவு தயாரித்தேன். காலையில் அனைவருக்கும் கொடுத்தேன்.
பதினோரு மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் திரு கலாம் அவர்களை நாங்கள் சந்தித்தோம். தேர்தலில் போட்டி யிட இசைவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டோம். போட்டி இல்லாமல் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக விரும்பினால் அவர் சம்மதிப்பார் என்பதைத் தெரிந்து கொண்டோம். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. காங்கிரÞ கூட்டணி அப்துல் கலாமை விரும்பவில்லை.
இந்தப் பின்னணியில் அப்துல் கலாம் அவர்கள் மீண்டும் போட்டியிடவில்லை.
இதிலிருந்து ஒரு உண்மை புலனாகும். மேதகு அப்துல் கலாம் அவர்கள் முதல் முறை குடியரசுத் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிட்டதிலும் அடியேனின் பங்கு இருக்கின்றது. இரண்டாவது முறையாக அவரைப் போட்டியிடச் செய்யவும் நான்தான் முழு மூச்சாகப் பாடுபட்டேன் என்பதையும் தெரிவிப்பதற்கு வாய்ப்பு அளித்த தினமலருக்கு நன்றி!
மேலும் தொடர்ந்து தினமலர் இப்படிக் கிண்டலடிக்கிறது.
“நிருபர் ஒருவர் அப்துல் கலாம் ஜனாதிபதி பதவிக்கு வர ம.தி.மு.க. ஆதரவு காரணமாம். காமெடி பண்ற துக்கும் ஒரு அளவில்லையா? என்றார். அருகிலிருந்த நண்பர், விட்டா, ஒபாமா அமெரிக்க அதிபரானதுக்கே தான்தான் காரணமுன்னு சொல்வாரு... இப்படியெல்லாம் பேசுறதுக்கு, தனக்குத் தகுதி இருக்கா, இல்லியான்னுகூட யோசிக்கிறது இல்லை... எனக் கூறி, தலையிலடித்து நகர்ந்தார்.”
அமெரிக்க நாட்டில் மிருகங்களை விட இழிவாக ஒருகாலத்தில் நடத்தப்பட்ட கருப்பர் இனத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா, 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி, Þபிரிங்பீல்டில், ‘நான் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராகப் போட்டியிட விரும்புகிறேன். அதற்காகக் கட்சியின் வேட்பாளர் என்ற தேர்வில் நான் போட்டியிடுகிறேன்’ என்று அறிவித்தார்.
2007 மார்ச் 8 ஆம் நாள் சென்னை சோவியத் கலாச்சார மையத்தில் நடைபெற்ற உலக மகளிர் நாள் விழா கூட்டத்தில் நான் உரை ஆற்றும்போது, ‘அனைத்துலக அரசியலில் ஓர் அதிசயம் நிகழப் போகிறது. அமெரிக்க நாட்டில் குடியரசுத் தலைவராக ஒரு கருப்பரான பாரக் ஒபாமா பொறுப்பு ஏற்கப் போகும் அதிசயம் நடக்கப் போகிறது’ என்று கூறினேன். அதற்கான காரணங்களையும், பாரக் ஒபாமாவின் ஈடு இணையற்ற பேச்சு ஆற்றலையும் விளக்கினேன்.
அமெரிக்க நாட்டில் வசிக்கின்ற தமிழகத்தைச் சேர்ந்த எனது நண்பர் களிடம், நான் இப்படிப் பேசியதாகச் சொன்னபோது அவர்கள் கேலி செய்தார்கள். கிண்டல் செய்தார்கள். ‘உங்களுக்கு அமெரிக்காவைப் பற்றி என்ன தெரியும்? அமெரிக்காவிலேயே நாங்கள் குடியிருக்கிறோம். மக்கள் தொகையில் 12 விழுக்காடாக இருக்கின்ற கருப்பர்கள் ஒருநாளும் குடியரசுத் தலைவர் பொறுப்பிற்கு வர முடியாது; பாரக் ஒபாமா ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகக் கூட வர முடியாது’ என்றனர்.
அதற்கு நான், ‘உங்கள் அளவுக்கு எனக்கு அமெரிக்க ஞானம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அங்கு நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வையும் நான் கூர்மையாகக் கவனித்துக் கொண்டே வருகிறேன். நடக்கப் போவதைச் சொல்லுகிறேன். ஒபாமா ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஆவார்; அவரே ஜனாதியாகவும் ஜெயிப்பார். 2008 நவம்பர் மாதம் வாக்குப் பதிவு முடிந்து 24 மணி நேரத்திற்குள் முடிவுகள் தெரியும் அல்லவா? உங்கள் அலைபேசிகளை அணைக்காமல் வைத்து இருங்கள். நான் அப்போது உங்களிடம் பேசுகிறேன்’ என்றேன்.
கழகத்தின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த நினைவில் வாழும் தத்துவக் கவிஞர் அண்ணன் குடியரசு அவர்கள், ‘பாரக் ஒபாமாவைப் பற்றிச் சங்கொலியில் தொடர்ந்து கடிதம் எழுதுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். பேரறிஞர் அண்ணா அவர்கள் இர்விங் வாலÞ என்ற ஆங்கில நாவல் ஆசிரியர் எழுதிய மனிதன் என்கின்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, வெள்ளை மாளிகையில் என்ற தலைப்பில், காஞ்சி இதழில் 12 வாரங்கள் தம்பிக்குக் கடிதங்கள் எழுதினார். கருப்பர் இனத்தைச் சேர்ந்த டக்ளÞ டில்மன், சந்தர்ப்ப சூழ்நிலையால் வெள்ளை மாளிகையில் குடியரசுத் தலைவராகும் சம்பவத்தை மையப்படுத்தி அண்ணா அழகாக எழுதி இருந்தார்.
அதுபோல நான் எழுதியவற்றைப் புத்தகம் ஆக்கி, அதற்கு என்ன பெயர் வைத்தேன் தெரியுமா? ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட பாரக் ஒபாமா, வாக்காளர்கள் முன் வைத்த முழக்கமான ஆம்; நம்மால் முடியும் (Yes; We Can). என்று தலைப்பு இட்டேன்.
2008 ஜூன் கடைசி வாரத்தில் அமெரிக்கா சென்ற நான், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமாவைச் சந்திக்கப் பல வழிகளிலும் முயன்றேன். அவர் உச்சகட்டத் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கிறார். எனவே, சந்திக்க இயலாது. வேண்டுமானால் அவரது துணைவியார் மிட்செல் அவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் என்றனர். ‘பாரக் ஒபாமாவைச் சந்திப்பதுதான் என் நோக்கம்’ என்றேன். ஜனநாயகக் கட்சியின் செனட் சபை உறுப்பினர்கள் இருவருக்கு பாரக் ஒபாமாவைப் பற்றி நான் புத்தகம் எழுதி இருக்கின்ற விவரத்தைத் தெரிவித்து, அவரைச் சந்திக்க உதவுமாறு கேட்டு இருந்தேன்.
எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. ‘ஜூலை 12 ஆம் தேதி சிகாகோவின் ஷெரட்டன் ஓட்டலில், ஜனநாயகக் கட்சியின் நிதி திரட்டிய முக்கியத் தலைவர்களை பாரக் ஒபாமா சந்தித்து நன்றி கூறுகிறார். அங்கே நீங்கள் சந்திக்கலாம். பிற்பகல் மூன்று மணிக்கெல்லாம் ஷெரட்டன் ஓட்டலுக்கு வந்து விடுங்கள்’ என்று சொன்னார்கள்.
எனது மருமகன் ஜான் புஷ்பராஜை அழைத்துக் கொண்டு அங்கே சென்றேன். ஏற்கனவே என் பெயர் பதிவு செய்யப்பட்டு இருந்ததால், மூன்று நான்கு இடங்களில் அனுமதி பெற்று ஒபாமாவைச் சந்திக்கும் இடத்திற்குச் சென்றோம். அங்கே வந்த இரண்டு செனட்டர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர்கள் அன்பாகப் பேசினார்கள். ஆனால், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் என் கையில் புத்தகம் இருப்பதைப் பார்த்து, ‘ஒபாமாவிடம் இதையெல்லாம் கொடுக்கக்கூடாது. அவர் உங்களிடம் பேச நேரம் இல்லை. நீங்கள் கை குலுக்கிக் கொள்ளலாம்’ என்றார். எங்கே புத்தகத்தைப் பறித்துக் கொண்டு விடுவார்களோ என்று எனக்குக் கவலை யாகி விட்டது. ‘நான் புத்தகம் கொடுக்க மாட்டேன்’ என்றேன்.
ஐந்து மணிக்கு வர வேண்டிய ஒபாமா 5.40 க்குத்தான் வந்தார். ‘நண்பர்களே தாமதத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்றவாறு வரிசையாக ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டே வந்தார். அவர் என் அருகில் வந்தவுடன் ஓரடி முன்னால் சென்று, ‘நான் மகாத்மா காந்தி பிறந்த நாட்டில் இருந்து வந்து இருக்கின்றேன்’ என்றேன். திகைப்புடன் என்னைப் பார்த்த ஒபாமா, ‘இந்தியாவின் எந்தப் பகுதி?’ என்று கேட்டார். ‘இந்தியாவின் தெற்குப் பகுதியில் பழமையான நாகரிகத்தின் தொட்டிலான தமிழ்நாடு’ என்று சொன்னேன்.
கருப்பர் இனத்திற்குப் பூட்டப்பட்ட அடிமை விலங்குகளை உடைக்கப் போராடிய தலைவர்கள் பெயரை வரிசை யாகச் சொல்லி, ஆபிரகாம் லிங்கன், ரோசா பார்க்Þ அம்மையார், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் கண்ட கனவு நனவாகும் நாள் வந்து விட்டது. வெள்ளை மாளிகையின் அதிபராக உங்களைப் பார்ப்பேன். உலகெங்கும் ஒடுக்கப்படும் உரிமை இழந்த மக்கள் உங்கள் வெற்றியின் மூலம் தங்களுக்கு விடியல் பிறக்கும் என்று நம்புகிறார்கள்’ என்று இரண்டு நிமிடங்கள் சொல்லி முடித்தேன்.
புன்னகை பூத்தவாறே நின்ற அவரிடம், இது உங்களைப் பற்றி நான் எழுதிய புத்தகம் என்று நீட்டினேன். அதில் வெள்ளை வேட்டியில் கருப்பு சால்வை அணிந்து கொண்டு இருந்தேன். அவரைச் சந்தித்தபோது கோட் சூட் அணிந்து இருந்தேன். அந்தப் படத்தைப் பார்த்து Who is this guy? என்று கேட்டார். ‘அது நான்தான்’ என்றேன். சிரித்தார். ‘இந்தப் புத்தகத்தில் உங்கள் கையெழுத்து வேண்டும்’ என்றேன்.
புத்தகத்தைக் கையில் வாங்கிக் கொண்டார். என் சட்டைப் பையில் இருந்த பேனாவை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அந்தப் புத்தகத்தின் அட்டை வழுவழுப்பாக இருந்தால் என்னுடைய பேனாவால் அதில் கையெழுத்து இட முடியாது என்பதால், அவர் தன் உதவியாளருக்கு சைகை காட்டினார். மார்க்கர் பேனாவைக் கொடுத் தார்கள். இடது கையால் வாங்கிய பாரக் ஒபாமா, ‘மிÞடர் வைகோ, உங்கள் பெயரின் எழுத்துகளைச் சொல்லுங்கள்’ என்றார். நான் சொன்னேன். இந்தப் புத்தகத்தில் உங்கள் பெயர் அச்சிடப்பட்டு இருக்கின்றதா? என்று கேட்டுவிட்டுப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தார்.
என் பெயரைப் பார்த்து ‘To Mr. Vaiko, Yes We can’ என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அவரது தேர்தல் முழக்கத்தையே எழுதிக் கொடுத்தார்.
2008 ஜூன் கடைசி வாரத்தில் அமெரிக்கா சென்ற நான், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமாவைச் சந்திக்கப் பல வழிகளிலும் முயன்றேன். அவர் உச்சகட்டத் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கிறார். எனவே, சந்திக்க இயலாது. வேண்டுமானால் அவரது துணைவியார் மிட்செல் அவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் என்றனர். ‘பாரக் ஒபாமாவைச் சந்திப்பதுதான் என் நோக்கம்’ என்றேன். ஜனநாயகக் கட்சியின் செனட் சபை உறுப்பினர்கள் இருவருக்கு பாரக் ஒபாமாவைப் பற்றி நான் புத்தகம் எழுதி இருக்கின்ற விவரத்தைத் தெரிவித்து, அவரைச் சந்திக்க உதவுமாறு கேட்டு இருந்தேன்.
எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. ‘ஜூலை 12 ஆம் தேதி சிகாகோவின் ஷெரட்டன் ஓட்டலில், ஜனநாயகக் கட்சியின் நிதி திரட்டிய முக்கியத் தலைவர்களை பாரக் ஒபாமா சந்தித்து நன்றி கூறுகிறார். அங்கே நீங்கள் சந்திக்கலாம். பிற்பகல் மூன்று மணிக்கெல்லாம் ஷெரட்டன் ஓட்டலுக்கு வந்து விடுங்கள்’ என்று சொன்னார்கள்.
எனது மருமகன் ஜான் புஷ்பராஜை அழைத்துக் கொண்டு அங்கே சென்றேன். ஏற்கனவே என் பெயர் பதிவு செய்யப்பட்டு இருந்ததால், மூன்று நான்கு இடங்களில் அனுமதி பெற்று ஒபாமாவைச் சந்திக்கும் இடத்திற்குச் சென்றோம். அங்கே வந்த இரண்டு செனட்டர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர்கள் அன்பாகப் பேசினார்கள். ஆனால், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் என் கையில் புத்தகம் இருப்பதைப் பார்த்து, ‘ஒபாமாவிடம் இதையெல்லாம் கொடுக்கக்கூடாது. அவர் உங்களிடம் பேச நேரம் இல்லை. நீங்கள் கை குலுக்கிக் கொள்ளலாம்’ என்றார். எங்கே புத்தகத்தைப் பறித்துக் கொண்டு விடுவார்களோ என்று எனக்குக் கவலை யாகி விட்டது. ‘நான் புத்தகம் கொடுக்க மாட்டேன்’ என்றேன்.
ஐந்து மணிக்கு வர வேண்டிய ஒபாமா 5.40 க்குத்தான் வந்தார். ‘நண்பர்களே தாமதத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்றவாறு வரிசையாக ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டே வந்தார். அவர் என் அருகில் வந்தவுடன் ஓரடி முன்னால் சென்று, ‘நான் மகாத்மா காந்தி பிறந்த நாட்டில் இருந்து வந்து இருக்கின்றேன்’ என்றேன். திகைப்புடன் என்னைப் பார்த்த ஒபாமா, ‘இந்தியாவின் எந்தப் பகுதி?’ என்று கேட்டார். ‘இந்தியாவின் தெற்குப் பகுதியில் பழமையான நாகரிகத்தின் தொட்டிலான தமிழ்நாடு’ என்று சொன்னேன்.
கருப்பர் இனத்திற்குப் பூட்டப்பட்ட அடிமை விலங்குகளை உடைக்கப் போராடிய தலைவர்கள் பெயரை வரிசை யாகச் சொல்லி, ஆபிரகாம் லிங்கன், ரோசா பார்க்Þ அம்மையார், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் கண்ட கனவு நனவாகும் நாள் வந்து விட்டது. வெள்ளை மாளிகையின் அதிபராக உங்களைப் பார்ப்பேன். உலகெங்கும் ஒடுக்கப்படும் உரிமை இழந்த மக்கள் உங்கள் வெற்றியின் மூலம் தங்களுக்கு விடியல் பிறக்கும் என்று நம்புகிறார்கள்’ என்று இரண்டு நிமிடங்கள் சொல்லி முடித்தேன்.
புன்னகை பூத்தவாறே நின்ற அவரிடம், இது உங்களைப் பற்றி நான் எழுதிய புத்தகம் என்று நீட்டினேன். அதில் வெள்ளை வேட்டியில் கருப்பு சால்வை அணிந்து கொண்டு இருந்தேன். அவரைச் சந்தித்தபோது கோட் சூட் அணிந்து இருந்தேன். அந்தப் படத்தைப் பார்த்து Who is this guy? என்று கேட்டார். ‘அது நான்தான்’ என்றேன். சிரித்தார். ‘இந்தப் புத்தகத்தில் உங்கள் கையெழுத்து வேண்டும்’ என்றேன்.
புத்தகத்தைக் கையில் வாங்கிக் கொண்டார். என் சட்டைப் பையில் இருந்த பேனாவை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அந்தப் புத்தகத்தின் அட்டை வழுவழுப்பாக இருந்தால் என்னுடைய பேனாவால் அதில் கையெழுத்து இட முடியாது என்பதால், அவர் தன் உதவியாளருக்கு சைகை காட்டினார். மார்க்கர் பேனாவைக் கொடுத் தார்கள். இடது கையால் வாங்கிய பாரக் ஒபாமா, ‘மிÞடர் வைகோ, உங்கள் பெயரின் எழுத்துகளைச் சொல்லுங்கள்’ என்றார். நான் சொன்னேன். இந்தப் புத்தகத்தில் உங்கள் பெயர் அச்சிடப்பட்டு இருக்கின்றதா? என்று கேட்டுவிட்டுப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தார்.
என் பெயரைப் பார்த்து ‘To Mr. Vaiko, Yes We can’ என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அவரது தேர்தல் முழக்கத்தையே எழுதிக் கொடுத்தார்.
கேமராக்கள் மின்னின. என் மருமகன் அதனைப் படம் பிடித்தார். சன் தொலைக் காட்சியிலும், தமிழக ஏடுகளிலும் அது வெளிவந்தது.
தேர்தல் பிரச்சாரத்தின் உச்சகட்டம். அடுத்து ஒரு பெரிய பிரச்சாரக் கூட்டத் திற்கு அவர் செல்ல வேண்டும். இந்த நேர நெருக்கடியிலும், என் பெயரின் எழுத்துகளைத் தவறாக எழுதிவிடக் கூடாதே என்று, பாரக் ஒபாமா இவ்வளவு கவனம் செலுத்துகிறாரே என்று எண்ணிய போதுதான் ஒன்றைப் புரிந்து கொண்டேன். இவ்வளவு உன்னதமான பதவிக்கு அவர் வர முடிந்தது என்றால், பிறரிடம் இல்லாத அபூர்வமான இயல்புகளும் திறமையும் அவரிடம் இருப்பதால்தான்.
இந்தக் காலகட்டத்தில் பாரக் ஒபாமாவைச் சந்தித்த இந்திய அரசியல்வாதி அடியேன் ஒருவன்தான்.
நவம்பர் 4 ஆம் தேதி தேர்தல் நடை பெற்றது. அன்று நள்ளிரவில் இருந்தே வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரத் தொடங்கின. நாள் தவறாமல் தொலைக் காட்சியில் சிஎன்என் அலைவரிசையில் அமெரிக்கத் தேர்தல் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டு இருந்த எனக்கு இப்போது அந்த வாய்ப்பு பறிக்கப்பட்டது.
‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில், சென்னை இராஜா அண்ணா மலை மன்றத்தில் என்ற தலைப்பில் நான் உரை ஆற்றியதற்காக என் மீது தேசத்துரோக வழக்கு 124 ஏ பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, சென்னை புழல் மத்தியச் சிறையில் ஒரு தனி அறையில் அடைக்கப்பட்டு இருந்தேன். அங்கு தொலைக்காட்சி வசதி இல்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வானொலிப் பெட்டி வைத்துக் கொள்ள அனுமதி பெற்று, அந்த வானொலியில் தேர்தல் முடிவுகளைக் கேட்டுக் கொண்டு இருந்தேன்.
நவம்பர் 5 பொழுது விடிந்தது. பாரக் ஒபாமா எனும் கருப்பு இன இளைஞர், அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் ஆனார். அகிலமே வியந்தது. ஒடுக்கப்படுவோர், உரிமை இழந்தோர், அடக்குமுறைக்கு ஆளாவோர் துயரம் நீங்குவதற்கு ஓங்கி எழும் குரல்தான் சமூக நீதியின் குரல். அதனை இந்தியத் துணைக்கண்டத்தில் நிலைநாட்டிய திராவிட இயக்கத்தின் வார்ப்படம் அல்லவா நான்? அதனால் இந்தத் தேர்தல் முடிவை அறிந்து என் மனம் குதூகலத்தில் கும்மாளம் இட்டது. ஆனால் சிறைக்குள் இருந்ததால், எனது அமெரிக்க நண்பர்களிடம் சவால் விட்டது போல், அலைபேசியில் அவர்களை அலை பேசியில் அழைத்துப் பேச முடியவில்லை.
2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றேன். ஒரு மாதம் கழித்து ஒருநாள் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் பயணித்தபோது, என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்த இளைஞர், ‘நான் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் பொறியாளராகப் பணி ஆற்றுகிறேன். என் தாயாரைப் பார்க்க ஊருக்குச் செல்கிறேன். உங்களின் பேச்சாற்றலை மிகவும் ரசிக்கிறவன் நான். கடந்த ஆண்டு நீங்கள் அமெரிக்கா வந்து இருந்தபோது, இன்றைய அதிபர் பாரக் ஒபாமாவை நீங்கள் சந்தித்ததை நான் அறிவேன். அவரும் சிறந்த பேச்சாளர். நீங்களும் அதைப் போன்ற திறமைசாலி. எனவே, நீங்கள் இருவரும் சந்தித்தது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது’ என்றார்.
நான் அவருக்குச் சொன்னேன்: ‘ஒபாமா என்னுடைய புத்தகத்தில் கையெழுத்து இடும்போது, ‘திரு வைகோவுக்கு... நம்மால் முடியும்’ என்று எழுதினார். அதன் பொருள், ‘என்னாலும் முடியும்; உன்னாலும் இயலும்’ என்பதுதான். அவரால் சாதிக்க முடிந்தது. அப்படி எதுவும் என்னால் இயலவில்லை’ என்று சிரித்துக் கொண்டே சொன்னேன். அதற்கு அந்த இளைஞர், ‘காலங்கள் இருக்கின்றன. உங்களாலும் முடியும் என்ற நிலை வரும் என்றார். உங்கள் நல்ல எண்ணத்திற்கு மிக்க நன்றி’ என்றேன்.
இதைச் சொல்லி நான் தம்பட்டம் அடித்து இருக்கின்றேனா? இல்லையே. ஆனால் இதனையும் மக்களுக்குத் தெரிவிக்க வாய்ப்பு அளித்த தினமலருக்கு மிகமிக நன்றி.
கடைசியாக தினமலர் பின்வருமாறு எள்ளி நகையாடுகிறது.
“இப்படியெல்லாம் பேசுறதுக்கு தனக்குத் தகுதி இருக்கா, இல்லியான்னுகூட யோசிக்கிறது இல்லே” எனக்கூறித் தலையிலடித்து நகர்ந்தார் நிருபர்.
ஆம்; தினமலரின் வார்த்தைகளில் நான் தகுதி அற்றவன்.
பொய்யாமொழிப் புலவரின் திருக்குறளை இங்கே வைக்கிறேன்.
தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்
தகுதி உள்ளவர், தகுதி இல்லாதவர் என்பது, அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும். ஆம்; நான் பொதுவாழ்வில் தகுதி உள்ளவனாக இருந்தேனா இல்லையா என்பது, என் உயிர் ஓய்ந்து நான் மண்ணோடு மறைந்தபிறகு தீர்மானிக்கப்படும்!
எழுச்சிச் சங்கொலிக்கும்
உங்கள் பணிகள் வளரட்டும்
வைகோ
(சங்கொலி, 24.07.2015)
உங்கள் பணிகள் வளரட்டும்
வைகோ
(சங்கொலி, 24.07.2015)


